Quantcast
Channel: JPR Notes
Viewing all articles
Browse latest Browse all 802

Tamil Current Affairs 1st June 2017 TNPSC VAO Group 2A

$
0
0
Tamil Current Affairs 1st June 2017 TNPSC VAO Group 2A

தேசிய செய்திகள் :

1) ஜம்மு-காஷ்மீரில் உள்ள ராஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் மோட்டார்கள் ரக குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

2) பசுவை தேசிய விலங்காக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜஸ்தான் அரசுக்கு அந்த மாநில ஐகோர்ட்டு பரிந்துரைத்துள்ளது.

3) இந்தியர்களின் தனிநபர் வருமானம் குறித்த புள்ளி விவரங்களை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி முந்தைய நிதி ஆண்டான 2015-16ஐ விட 2016-17ம் நிதியாண்டில் இந்தியர்களின் தனிநபர் வருமானம் ரூ.1 லட்சத்து 3 ஆயிரமாக உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.

4) தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவராக பேராசிரியர் ராம்சங்கர் கத்தேரியா என்பவரை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நியமனம் செய்துள்ளார்.

5) ஆதார் அட்டை இல்லாத அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கக்கூடாது என உத்திரப்பிரதேச மாநில அரசு புதிய உத்தரவை அறிவித்துள்ளது.

6) ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய 4 நாடுகளில் அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் நகருக்கு சென்றார். இந்நிலையில் இந்தியா-ஸ்பெயின் நாடுகளுக்கிடையே இணைய பாதுகாப்பு, விமான போக்குவரத்து, தொழில்நுட்ப ஒத்துழைப்பு உட்பட 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

7) சட்டீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள சோட்டோ ராய்னார் கிராமம் அருகே வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பன்னாட்டு செய்திகள் :

1) ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் இந்திய தூதரகம் அருகே தலீபான் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

2) சிரியாவில் உள்ள பல்மைரா நகருக்கு அருகில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளின் இலக்குகளை குறிவைத்து ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்த ரஷ்யா முடிவு செய்துள்ளது.

3) வங்காள விரிகுடாவில் வரும் ஜூலை மாதம் கடற்படை பயிற்சியில் ஈடுபட ஆஸ்திரேலியா விடுத்த கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளதை சீனா வரவேற்றுள்ளது.

4) பில்கேட்ஸ் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கிய பால் ஆலன், ராக்கெட்டுகளை சுமந்து செல்ல உலகின் மிகப்பெரிய விமானத்தை கட்டமைத்துள்ளார்.

5) ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை தலைவராக ஸ்லோவேக்கிய நாட்டு வெளியுறவு மந்திரி மிரோஸ்லாவ் லாஜ்காக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

6) வடகொரியாவின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வழிமறித்து தாக்கும் சோதனையை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
விளையாட்டுச் செய்திகள் :

7) பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா அணி கஜகஸ்தானின் ஷிவ்டோவா அணியிடம் தோல்வியடைந்தது.

8) தாய்லாந்து ஓபன் கிராண்ட்பிரீ பேட்மிண்டன் போட்டி பாங்காங்கில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2வது ஆட்டத்தில் இந்திய வீரர் சவுரவ் வர்மா சகநாட்டு வீரர் ஆனந்த் பவாரை வீழ்த்தி 3 வது சுற்றுக்கு முன்னேறினார்.

9) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாக குழுவின் உறுப்பினர் ராமசந்திர குஹா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

10) இங்கிலாந்து நாட்டின் பாரம்பரிய சீஸ்-ரோலிங் போட்டி குளொசெஸ்டர் என்னும் கிராமத்தில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

11) பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், கார்பைன் முகுருஸா உள்ளிட்டோர் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

12) கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியின் ஆடவர் பிரிவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியும், மகளிர் பிரிவில் செகந்திராபாத்-தெற்கு மத்திய ரயில்வே அணியும் பட்டம் வென்றன.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :

1) பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க எஸ்எம்எஸ் வசதியை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

2) ராணுவ தளவாட உற்பத்தியில் தனியாருடன் சேர்ந்து தயாரிக்கும் இந்தியாவின் முயற்சியினால் சிறந்த உற்பத்தி கேந்திரமாக உருவாகும் என்று அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

3) 2016-17ல் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.1% ஆக வளர்ச்சியடைந்துள்ளது என்று அரசு புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.

4) அதிக செயல்திறன் கொண்ட எஸ்கலேட்டர் தயாரிப்பை அதிகரிக்க ஜான்சன் லிப்ட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

5) சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட சோழ மண்டலம் எம்எஸ் ஜெனரல் இன்ஷ_ரன்ஸ் நிறுவனம் ரூ.100 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

6) வர்த்தக முடிவில் இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 8 புள்ளிகள் சரிந்து 31137 புள்ளிகளாக உள்ளது. மேலும் நிப்டி 5 புள்ளிகள் சரிந்து 9616 புள்ளிகளாக உள்ளது.

7) பாரத ஸ்டேட் வங்கி பல்வேறு சேவைகளுக்கு அறிவித்துள்ள புதிய கட்டண விகிதங்கள் அமலுக்கு வந்துள்ளது.

8) இன்றைய வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 70 புள்ளிகள் சரிந்து காணப்பட்டுள்ளது. மேலும் மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 69.90 புள்ளிகள் சரிந்து 31075.90 புள்ளிகளாக உள்ளது.

Viewing all articles
Browse latest Browse all 802

Latest Images

Trending Articles



Latest Images