Quantcast
Channel: JPR Notes
Viewing all articles
Browse latest Browse all 802

பெரும்பாண்மையான பொறியியல் மாணவர்களின் இன்றைய நிலை

$
0
0
பெரும்பாண்மையான பொறியியல் மாணவர்களின் இன்றைய நிலை


ப்ளிப்கார்ட்ல பொருள் டெலிவரி குடுக்க வந்த நபர் கிட்ட பொருள வாங்கிட்டு கையெழுத்து போட்டுட்டு இருந்தேன். அந்த நேரத்துல அந்த பையன் சார் கேக்கறேன்னு தப்பா  நினைச்சுக்க வேண்டாம்ன்னு  ஆரம்பித்தார்.... நான் கூட எதோ டிப்ஸ் கிப்ஸ் கேக்க போறாரோன்னு நினச்சு என்ன தம்பி  சொல்லுங்கன்னுசொன்னேன்.



சார் எதாச்சும் நல்ல இடத்தில வேலை இருந்தா சொல்லுங்க சார் ப்ளீஸ்ன்னு சொன்னதும் எனக்கே பாவமாபோச்சு. சரி உங்க படிப்பு என்ன என்ன மாதிரி வேலை வேணும்ன்னு கேட்டேன்.... அந்த பையன் சொன்னதும் எனக்கே ரொம்ப கஷ்டமாபோச்சு... கோவைல இருக்கற ஒரு பெரிய காலேஜ்ல பிஈ படிச்சு இருக்கார்...நல்ல மதிப்பெண்ல பாஸ் ஆகி உள்ளார்....

இப்படி படிச்சுட்டு ஏன் டெலிவரிபாய் வேலை பாக்கறீங்கன்னுகேட்டேன். என்னை படிக்க வைக்கவே வீட்ல ரொம் பகஷ்டப்பட்டாங்க. படிச்சு முடிச்சுட்டு படிப்புக்குஏற்ற வேலை தான் வேணும்ன்னு மிடுக்கா இருந்தேன். போக போக கஷ்டம் அதிகரிக்க பணத்துக்கு வேண்டி இப்படி கிடச்ச வேலைய செய்யறேன். இப்படியேபோனா நான் படிச்சாபடிப்பு கூட மறந்துபோகும் போல. அதான் இப்படி மனசுக்கு பட்டவங்ககிட்ட உதவிகேக்கறேன்னு சொன்னார்.

சரின்னு எனக்கு தெரிஞ்ச நண்பர் மூலமா சம்பளம் குறைவா இருந்தாலும் அவர் படித்த  படிப்புக்கு ஏற்ற வேலையை பெற்று கொடுத்தேன். அந்த பையன் ரொம்ப நன்றிங்க அண்ணா சொல்லிட்டு போனார். போயிட்டு எனக்கு போன் பண்ணி அவங்க பெற்றோர் கிட்ட கொடுத்து நன்றி சொல்ல சொல்லிட்டான்.

எனக்கே பாவமா இருந்துச்சு...இதை விட கொடுமை என்னன்னா அந்த பையன் சொன்ன இன்னொரு தகவல்தான். பிளிப்கார்ட் டெலிவரி பாய் வேலைக்கு அவனை போலவே பிஈ முடித்த பலபேர் உள்ளனர் என்பது தான்.

பல லட்சம் செலவு பண்ணி படிச்சு டெலிவரிபாய் வேலை பாக்கறது எவ்ளோ கஷ்டமா இருக்கும் படிச்சவங்களுக்கும், படிக்க வெச்சவங்களுக்கும்.

Viewing all articles
Browse latest Browse all 802

Trending Articles