Quantcast
Channel: JPR Notes
Viewing all articles
Browse latest Browse all 802

4th March 2017 Tamil Current Affairs

$
0
0

தேசிய செய்திகள்:

*.‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தின் சார்பில் ‘திங்க் எடு கான்க்ளேவ் 2017’ மாநாடு சென்னையில் மார்ச் 3ல் தொடங்கியது. இதில் இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரத்தை அளிப்பதன் மூலம் சர்வதேச தரத்தில் கல்வியை அளிக்க முடியும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைஅமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.

*.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி மார்ச் 9 ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கு முன்பு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி, மத்திய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி ஆகியவற்றுக்கு மார்ச் 3ல் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெறமத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

*.ரஃபேல் போர் விமானங்கள் வருகிற 2019 ம் ஆண்டில் இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும் என விமானப்படைத் தளபதி பி.எஸ்.தனோவா கூறினார்.

*.சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஏர்இந்தியா நிறுவனம் உலக சாதனைக்காக முற்றிலும் பெண் ஊழியர்களை கொண்டு விமானத்தில் உலகை சுற்றிவர திட்டமிட்டு பிப்ரவரி 27ல் டெல்லியில் இருந்து ‘போயிங்’ ரக ஏர் இந்தியா விமானம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு சென்று அட்லாண்டிக் நாடுகள் வழியாக உலகை சுற்றி டெல்லி வந்தடைந்தது. இது புதிய உலக சாதனையாகும்.

*.நாகா அமைதி ஒப்பந்தத்தால் அஸ்ஸாம் மாநிலத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும் என அம்மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான தருண்கோகோய் கேட்டுக் கொண்டார்.

*.இந்தியா முழுவதும் பள்ளிகளில் மாணவர்கள் மதிய உணவு சாப்பிட தங்களுடைய ஆதார் எண்களை கொடுக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை மத்தியமனிதவள மேம்பாடு அமைச்சகம் கடந்த பிப்ரவரிமாதம் இறுதியில் பிறப்பித்து உள்ளது.

*.நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன்எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கடந்த15 ம் தேதி அனுமதி வழங்கியது. இதில் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெடுவாசல் எனும் கிராமத்திலும் இயற்கை எரிவாயு எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. அங்கு இயற்கை எரிவாயு எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு கிடையாது என ஓ.என்.ஜி.சி இயக்குநர் திவேதி கூறியுள்ளார்.

*.நாட்டின் பாதுகாப்புச் சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தில்லியிலுள்ள மத்திய உள்துறை அமைச்சக அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டத்தை மார்ச் 3 ல் நடத்தினார்.

பன்னாட்டு செய்திகள்:

*.இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் மார்ச் 7ல் நடைபெறவுள்ள இந்தியப் பெருங்கடல் மண்டல நாடுகள் சங்கத்தின் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் குடியரசு துணை தலைவர் ஹமீது அன்சாரி பங்கேற்கிறார். இந்தியப் பெருங்கடலை ஒட்டிய இந்தியா, வங்கதேசம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட 21 நாடுகள் அங்கம் வகிக்கும் சர்வதேச அமைப்பு தான் இந்தியப் பெருங்கடல் மண்டல நாடுகள் சங்கம்.

*.இந்தியா – சீனா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. அருணாசலப் பிரதேசத்தில் உள்ள தவாங் பிராந்தியத்தை இந்தியா விட்டுக் கொடுப்பதே இரு நாடுகளின் எல்லைப் பிரச்சினைக்கு சிறந்த தீர்வு என சீனாவின் முன்னாள் தூதரக அதிகாரி டாய் பிங்குவோ தெரிவித்துள்ளார்.

*.இந்தியப் பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பு பகுதியில் ஈடுபடுத்துவதற்காக ‘கார்டியன்’ ரக அதிநவீன ஆளில்லா உளவு விமானங்களை இந்தியாவுக்கு உடனடியாக விற்க வேண்டும் என அமெரிக்க அரசை அமெரிக்க நாடாளுமன்ற செனட் அவை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

*.அமெரிக்க சுகாதாரத் துறையின் கீழ் மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட சேவைகளைக் கண்காணித்து வரும் மையத் தலைவர் பொறுப்புக்கு இந்திய வம்சாவளிப் பெண் சீமா வர்மாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

*.அமெரிக்க நிறுவனங்கள் அயல்பணி முறையில் செயல்படுத்தும் அழைப்பு மையங்களைக் கட்டுப்படுத்தும்; மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

*.அமெரிக்காவில் இருந்து கொண்டு வெளிநாடுகளில் இருந்து அயலக சேவையை (அவுட்சோர்ஸ்) பயன்படுத்தும் நிறுவனங்கள் அரசிடம் இருந்து நிதி உதவியோ கடனோபெற தகுதியற்றவை என ஆக்குவதற்கான மசோதா அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

*.போஸ்னியா நாட்டிலுள்ள பிரமிடுகள் குறித்த ஆய்வைசுமார் 7 வருடங்களாக மருத்துவர் செமிர் ஓஸ்மானாகிச் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது. அதாவது பிரமிடுகள் மின்காந்த விட்டங்களை வெளியேற்றும் தன்மை கொண்டதாகவும் அதில் மின்சக்தி அதிகளவில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதை பயன்படுத்தி வேற்று கிரகத்திற்கு ஸ்கைப் கால்செய்ய முடியும் என தகவல் வந்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள்:

*.ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் மகளிர் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாறு நிகழ்த்தியவர் சாக்ஷி மாலிக். இவருக்கு ஹரியாணா அரசு ரொக்கம் உள்ளிட்ட பரிசுகளை இன்னும் அளிக்க வில்லை என வேதனை தெரிவித்தார்.

*.சென்னையை அடுத்த மேலக்கோட்டையூர் தமிழ்நாடு உடற்கல்வியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் தேசிய அளவில் நடைபெற்ற பல்கலைக்கழக மகளிருக்கான கால்பந்து போட்டியில் திருவள்ளுவர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

*.மெக்சிகோ ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் உலகின் 2ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் தோல்வி கண்டார்.

*.சென்னை லீக் சீனியர் டிவிஷன் கால்பந்து போட்டியில் கணக்கு தணிக்கை அலுவலக மனமகிழ் மன்ற கிளப், ஹிந்துஸ்தான் ஈகிள்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.

*.விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழக அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கேரளாவை வீழ்த்தி 4வது வெற்றி கண்டது.

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்:

*.இத்தாலி நாட்டைச் சேர்ந்தசொகுசு கார் நிறுவனமான லம்போகினி புதிய அவெண்டார் எஸ் சொகுசு மாடல் காரை மும்பையில் நேற்று அறிமுகம் செய்துள்ளது. இரண்டு இருக்கைகள் கொண்ட இந்த காரின் விற்பனையக விலை ரூ5.01 கோடியாகும்.

*.வங்கி சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக 5 ஆயிரம் ரூபாய் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. தவறினால்அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

*.பணம் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்வதாக இந்திய தொழிலக கூட்டமைப்பு தகவல் தெரிவிக்கிறது.

*.புதிய தலைவர் என். சந்திரசேகரன் நிர்வாகத்தில் டாடா குழுமம் புதிய உச்சங்களை தொடும் என ரத்தன் டாடா நம்பிக்கை தெரிவித்தார்.

*.பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் 5 துணை வங்கிகளை இணைப்பதற்கான பங்கு பரிமாற்ற நடவடிக்கை மார்ச் 17ல் நடைபெறும்என வங்கி தெரிவித்துள்ளது.

*.தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தால் உள்நாட்டில் சென்ற பிப்ரவரி மாதத்தில் வேலை வாய்ப்பின்மை விகிதம் குறைந்துள்ளது என பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித்துறை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Viewing all articles
Browse latest Browse all 802

Latest Images

Trending Articles



Latest Images